search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அழகப்பா பல்கலைக்கழகம்"

    காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்துள்ளார். #BanwarilalPurohit
    சென்னை:

    காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்துள்ளார். இதுதொடர்பாக கவர்னர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராக டாக்டர் என்.ராஜேந்திரனை தமிழக கவர்னரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார். என்.ராஜேந்திரன் அழகப்பா பல்கலைக்கழகத்தில் வரலாறு பேராசிரியராக பணி புரிந்தவர். இவர் ‘தமிழ்நாட்டில் தேசியம்’ மற்றும் ‘சுவதேசியம்’ ஆகிய 2 நூல்களை எழுதி இருக்கிறார்.

    27 ஆண்டுகள் கல்வித்துறையில் கற்பித்தல் மற்றும் நிர்வாகத்திறமையில் அனுபவம் பெற்றவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முதல்வர் மற்றும் இயக்குனராகவும், துறை தலைவராகவும் பணியாற்றி உள்ளார். பாரதிதாசன் பள்ளி நிர்வாகத்தின் நிறுவனர் ஆவார். இந்திய வரலாற்று ஆராய்ச்சி குழுவில் 2008 மற்றும் 2015-ம் ஆண்டு என 2 முறை உறுப்பினராக அங்கம் வகித்துள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்ட என்.ராஜேந்திரன் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை கிண்டி ராஜ்பவனில் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.#BanwarilalPurohit
    காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட சுவாமிநாதனுக்கு துணைவேந்தர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    காரைக்குடி:

    தமிழக கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினராக புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சுவாமிநாதனை 3.5.2018 முதல் மூன்றாண்டுகளுக்கு நியமித்துள்ளார்.

    இவர் சிறந்த கல்வியாளர். 32 ஆண்டுகளாக கணிதவியல் பாடத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பின்தங்கிய மாணவர்கள் பலரையும் தனது கற்பிக்கும் திறனால் முன்னுக்கு கொண்டு வந்தவர்.

    சுவாமிநாதன் கணிதத்தில் எம்.எஸ்.சி.,எம்.பில். மற்றும் கணிதவியல் பாடத்தில் கல்வியியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

    2002- 2003-ம் கல்வியாண்டில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். 2005-ம் ஆண்டு “இந்திய கல்வியியலில் சிறந்த ஆசிரியர்”விருது பெற்றுள்ளார். 2014-ம் ஆண்டில் இருந்து சுவாமிநாதன் சிவகங்கை மாவட்ட சாரணர் இயக்கத்தின் ஆணையராக பணியாற்றி வருகிறார். பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு கணிதப் பாடப்புத்தகங்களை எழுதி உள்ளார்.

    தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கணிதப் புத்தகங்களையும் எழுதியுள்ளார். வெளிநாடுகளுக்கும் கல்விப்பயணமாக சென்றுள்ளார்.

    அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட சுவாமிநாதன், துணைவேந்தர் சுப்பையாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
    ×